நலம் காக்கும் எலுமிச்சை/Healthy lemon

நலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சை

மலாய்த் தீவினைத் தாயகமாகக் கொண்ட எலுமிச்சையில் சிட்ரிக் அமிலமும் வைட்டமின் 'சி' யும் நிறைந்து காணப்படுகிறது. எலுமிச்சைப்

பழத்திலிருந்து ஊறுகாய், எலுமிச்சைப் பழச் அவல், பழச்சேவை, தொக்கு போன்ற பல உணவுப் பண்டங்கள் தயாரிக்கலாம்

சாறு, எலுமிச்சை நன்னீர், எலுமிச்சைப் பார்லிநீர், எலுமிச்சை முரப்பா, மார்மலோடு, எலுமிச்சை

கோடையில் வெளியில் அலைச்சல்

உள்ளோருக்கு எலுமிச்சைப் பழச்சாறு அமுதமாக விளங்குகின்றதுபித்த மயக்கம், வாந்திக்கு

பித்த மயக்கம், வாந்தி மற்றும் நீர் வேட்கையை எலுமிச்சை போக்கும். நகச்சுற்றுக்கு ஏற்ற மருந்தாகும். ஜீரணமுண்டாக்கும். பசியை தூண்டும் தொற்று நோய்க் கிருமிகளை ஒழிக்கும் சக்தி

எலுமிச்சைக்கு உண்டு. தினமும் இரவு படுக்கும்போது எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, முகத்தில்

நன்றாகத் தேய்த்துவிட்டு காலையில் கழுவினால் ஒரு மாதத்தில் முகத்தில் உள்ள பருக்களும் கருப்புப் புள்ளிகளும் மறைந்து விடும். மேலும் உடலில் தேய்த்துக் குளிக்க உடம்பில் பளபளப்புத்

தோன்றும். எலுமிச்சம் பழத்தினைத் தலையில் தேய்த்துக் குளிப்பதால் பல நோய்கள்

குணமாகின்றன. இதுதான் "தேச்சி மூழ்கத் தெறிக்கும் வியாதியே" என தன்வந்திரி பகவான் தைல ஓலையி கூறப்பட்டுள்ளதுபற்களுக்கு உதவும் எலுமிச்சை

எலுமிச்சையின் தோல் பற்களுக்கு உதவுக் கூடியது. எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காயவைக்க வேண்டும். பின்னர் இடித்துச் குணமாக்கி அத்துடன் உப்புத் தூளையும் சேர்த்துத் தினமும் காலையில் பல் தேய்த்து வந்தால், பற்களின் கறை நீங்கி வெள்ளை வெளேரென்று பிரகாசிக்கும் துர்நாற்றம் நீங்கும். எலுமிச்சம் பழச் சாற்றுடன் தக்காளி சாற்றையும் சேர்த்துச் சுத்தமான தேனைக் கலந்து சாப்பிட கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்

கோடைக்கால வயிற்று வலிக்கு

எலுமிச்சம் பழத்தை ரசம் வைத்துச் சாப்பிட்டால் கோடைக் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தீரும் வயிற்றில் உள்ள வாயுவை அகற்ற, எலுமிச்சைச் சாற்றுடன் மோர் கலந்து பருகலாம். எலுமிச்சைப் பழச் சாற்றில் இஞ்சிச் சாற்றினைக் குழைத்துக் காலையிலும் மாலையிலும் தோன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஈளை இருமல் நின்று விடும். வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டால் மூட்டு வலிகள் பறந்து போகும் எலுமிச்சை பழ ரசத்துடன் உளுந்து மாவு சேர்த்து கால்களில் பூசிவர சேற்றுப்புண் குணமாகும்

அணுகுண்டு வெடிப்பினால் கதிரியக்கம் ஏற்பட்டு ஆயுள் குறைகிறது. பற்பல ஆபத்துகள் உருவாகின்றன. இதைத் தடுப்பதற்கு அரிய மருந்து ஒன்றை அயல் நாட்டில் எலுமிச்சம் பழத் தோலில் இருந்து கண்டுபிடித்துள்ளார்கள். இச் சத்தை 'பயோ பிளேவின்' என்பார்கள் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்