வெள்ளரி
வெள்ளரியானது. இனிய சுவையும் மணமும்கொண்ட ஒரு கொடிவகைப் பயிராகும். வெள்ளரியல் மேல் தோலில் முட்களுடன் காணப்படுவது முள் வெள்ளரி எனவும், மேல் தோல் முட்களின்றி மிருதுவாக நீண்டு இருப்பது நீள் வெள்ளரி எனவும் காய்கள் நீண்டு பருத்து பழுத்த பின் வெடிப்பது வெடிக்கும் வெள்ளரி எனவும் மூன்று வகைகள் உள்ளன. உடலுக்கு வெள்ளரிக் காய் குளிர்ச்சியை தந்து, வெயிலினால் ஏற்படும் உடல் அசதியைப் போக்குகின்றது. சருமத்தை வெள்ளரி குளிர வைக்கும். வெள்ளரிக்காயின் சாற்றை முகத்தில் தடவிவரக் கருத்துப் போன முகம் பளபளப்புடன் புதுப் பொலிவுடன் விளங்கும். இதனை வட்டமான வில்லைகளாக வெட்டிக் கண்களைச் சுற்றியும், கண்களின் மீதும் வைக்கச் சோர்ந்த கண்கள் புத்துணர்ச்சி பெறும்.வைட்டமின் 'பி, 'சி' நிறைந்தது:
கல்லீரல் கோளாறு காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கலைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிக்காயைச் சாதாரணமாகச் சமைக்கப் பயன்படுத்தாமல்
இளம்பிஞ்சுப் பருவத்தில் பறித்துப் பச்சைக் காய்களாகவோ, பச்சடி போன்ற உணவுப் பொருள்கள் தயாரிக்கவோ அல்லது பழுத்த பின் நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்தோ பல பழக்கலவை செய்யவும்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். 'ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் பேல் பூரி மற்றும் சுவையுள்ள உணவுப் பண்டங்கள் தயாரிக்கக் கொத்துமல்லி, கேரட், தக்காளி மற்றும் வெங்காயத்துடன் வெள்ளரியைச் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள் வெள்ளிரிக்காயில் வைட்டமின் 'பி', 'சி' சத்துகள் நிறைய உள்ளன. 100 கிராம் வெள்ளரியில் 96.3 சதவீத நீர்ச் சத்தும், 2.5 சதவீத கார்போஹைடிரேட், 0.4 சதவீத புரோட்டீன், 0.1 சதவீத கொழுப்பு, 7 மி கிராம் வைட்டமின் 'சி', 10 மி. கிராம் கால்சியம், 1.5 சதவீதம் இரும்புச் சத்து ஆகியவை உள்ளன வெள்ளரியில் நீர்ச் சத்து மிகுந்திருப்பதால் உடல் சூட்டினைத் தணித்துச் சிறுநீரைப் பெருக்கி எரிச்சல் எதுவும் இன்றி எளிதாகச் சிறுநீர் வெளிவரவும் வகை செய்கிறது
ஆக, மருத்துவக் குணங்கள் நிரம்பிய இளநீர் எலுமிச்சை மற்றும் வெள்ளரி ஆகியவை தாகத்தைத் தணிக்கும் அமுதசுரபிகளாக விளங்குகின்றன. எனவே கோடையில் விருந்தினர் களுக்கு காபி, டீ ஆகிய பானங்களைத் தருவதற்குப் பதிலாக இளநீர் எலுமிச்சை பழச் சாறு மற்றும் வெள்ளரிக்காய் கொடுத்துக் களைப்பைப் போக்கி நாமும் சாப்பிட்டு உடல் நலத்தைக் காப்போம்
x
0 கருத்துகள்