இளநீர் ஒரு வரப்பிரசாதம்
இளநீர்குரும்பை கருவுற்றதிலிருந்து ஏழு மாதங்கள் கழித்து எடுக்கப்படும் இளநீரில் நல்ல தரமான குடிப்பதற்கேற்ற நீர் கிடைக்கிறது. இதில் 5 சதவீதம் கரையும் உப்புகள் உள்ளன.
ஏழு மாதத்தில் கிடைக்கும் இளநீரில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் குடிப்பதற்கு இனிப்பாக இருக்கிறது தேங்காய் நன்கு முற்றும்போது மொத்த சர்க்கரையின் அளவு குறைகிறது
. இளநீர் பருகுவதால் உடல் உஷ்ணம் குறைவதோடு, குடலில் புழுக்கள் இருந்தால் அவையும் கொல்லப்படுகின்றன. வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் காலராவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில்நீர் வற்றிய நிலையில் இளநீர் கொடுக்கலாம்.
நீர் சூடு சிறுநீர் தடைபடுதல், நீர்க் கடுப்பு, நீரிழிவு, ஆஸ்துமா ஆகிய நோய்கள் குணமடையும். ரத்த ஓட்டத்தை இளநீர் அதிகரித்து, தாதுகளினால் ஏற்படும் விஷத் தன்மையை நீக்குகிறது. மஞ்சள்காமாலைக்கு இளநீர் ஒரு வரப்பிரசாதம்
கொப்புளம், சொறி, சிரங்கு, அம்மைக்கு
தோலின் மீது ஏற்படும் கொப்புளம், சொறி, சிரங்கு மற்றும் அம்மை போன்ற நோய் இளநீர் பருகுவதால் குணம் அடைகிறது.
இளநீரில் அலைனன், ஆர்ஜினைன், சிஸ்டைன், சிரைன் போன்ற அமினோ அமிலங்கள் பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாக இருப்பதால் குழந்தை களுக்கும் ஏற்றதேமேலும் 100 கிராம் இளநீரில் 17 கலோரி சத்து உள்ளது.
. திசு வளர்ப்பு முறைப்படி ஆய்வுக்கூடத்தில் நோய்கள் தாக்காத உயர் விளைச்சல் ரகங்களை உருவாக்கும் முறையில் இளநீர் பயன்படுகிறது. இளநீருடன் சம அளவு சர்க்கரையும், சிறிதளவு பிரினுமேன் ஈஸ்ட்டும் சேர்த்து வினிகர் தயாரிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் இளநீரிலிருந்து வினிகர் வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுகிறது
0 கருத்துகள்