பெண் மலட்டுத் தன்மை நீங்க
தாழம்பூ விழுதை அரைத்து பாலில் கலந்து குடித்து வர மலட்டுத் தன்மை நீங்கும் பத்து மிளகினை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச்சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள்காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்
இலந்தை இலை ஒரு கைபிடி அளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகு, நான்கு பூண்டு பல்லும் சேர்த்து அரைத்து மாத விலக்கான முதல் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான பிரச்சனைகள் வாய்ப்புகள் அதிகரிக்கும் Bris கரு உருவாகும் விஷ்ணு கிராந்தி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீருடன் கலந்து உட்கொண்டு வரவும்
அத்திப் பழத்துடன் தேன், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டு வர கருச்சிதைவு தடுக்கலாம்
அசோக மரப்பட்டை 200 கிராம். ஆடாதோடப் பூ 100 கி. மாந்தளிர் 100 கிராம் எடுத்துக் கொண்டு அவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து 2 கிராம் அளவு தேனில் கலந்து மாத விலக்கான 5வது நாளில் இருந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர பெண்கள் உடனே கருத்தரிப்பார்கள் இந்த மருந்து அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவையும் தடுக்கும்
அசோக மரப்பட்டையுடன் பசும்பாலைச் சேர்த்து சாப்பிட்டு வர கருச்சிதைவை தடுக்கலாம்
விஷ்ணு கிராந்தியுடன் ஓரிதழ் தாமரை சேர்த்துப் பால் விட்டு அரைத்து மாதவிடாய் கண்ட அன்று விடியற் காலையில் பெண்களுக்கு உட்கொள்ள கொடுத்து வர. மலடு நீங்கி குழந்தைப் பேறு அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்பருத்தி விதையை அரைத்து, கொட்டை பாக்களவு எடுத்து கோழி முட்டையின் வெண்கருவுடன் கலந்து சாப்பிட்டு, அடுத்த மாதம் மாதவிலக்கான அன்று நெறுஞ்சில் வேரை அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்
சுரைக்காய் நீர் சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் பி-2 இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து புரதம் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது
உப்பு, பூண்டு, வெங்காயம் போன்றவை ஆசை உணர்ச்சி களைத் தூண்டச் செய்யக் கூடியது. எனவே அவற்றை அளவோடு சாப்பிட வேண்டும்
வேம்பம்பூ, குங்குமப்பூ 20கிராம், பனைவெல்லம் 100 செய்முறை: வேப்பம்பூவை சுத்தம் செய்து லேசாக வறுத்து தூள் செய்து குங்குமப்பூவையும் மைய அரைத்து வேப்பம் பூவூடன் கூட்டி அரைத்துக் கொண்டு பனை வெல்லத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து இதனை 9 உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். மாதவிடாய் ஆன முதல் நாளிலிருந்து 3 நாட்களுக்கு 3 வேளையாக 9 உருண்டை சாப்பிடவும். பால் அருந்தவும் மறுமுறையும் தொடர்ந்து சாப்பிடவும் கர்ப்பம் தரிக்காவிடின் படிகாரத் தூளை வெறும் வயிற்றில் நீரில் சேர்த்து பருகி வர கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்
சீரகம், வெங்காயம் சம அளவு எடுத்து பாக்கு அளவை பசும்பாலில் கலந்து பருகவும்
மலட்டுத் தன்மை நீங்க விளாம் பழத்தையோ, கிடைக்காத பட்சம் அதன் ஓட்டையாவது (மேல் தோல்) கஷாயமாக காய்ச்சி 40 நாட்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள இரத்தம் சுத்தம் ஆசி குழந்தைப் பேறு உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு,
அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள் என்று பழமொழியும் உண்டு அரசமரத்தில் சூலகத்தை வலுவாக்கும் அழலையை நீக்கும் பொருள் உள்ளதால் ஆண் & பெண் குளித்த உடன் ஈரத் துணியுடன் சுற்றினால் அரச மரத்திலுள்ள அந்த சத்துகள் ஈர்க்கப்பட்டு குழந்தை உண்டாகும் வாய்ப்பு உள்ளது
அத்திக்காய் வடை
அத்திக்காயை விதை நீக்கி தண்ணீர் சேர்த்து வேக வைத்து பதத்தில் அரைத்து, அதுபோல கடலைப்பருப்பையும் ஊற வைத்து அரைத்து இஞ்சி, நறுக்கிய மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி செடி, உப்பு இவைகளை சேர்த்து வடை பக்குவத்தில் எண்ணெயில் இட்டு சிவக்க பொரித்து எடுத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்து மலடும் நீங்கும்
0 கருத்துகள்