உடல் நோய்கள் குணமாக்க-health tips of the day


உடல் நோய்கள் குணமாக்க

 இளநீர்

குரும்பை கருவுற்றதிலிருந்து ஏழு மாதங்க எடுக்கப்படும் இளநீரில் நல்ல தரமான குடிப்பதற்கேற்ற நீர் கிடைக்கிறது. இதில் 5 ச கரையும் உப்புகள் உள்ளன. ஏழு மாதத்தில் கிடைக்கும் இளநீரில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் குடிப்பதற்கு இனிப்பாக இருக்க தேங்காய் நன்கு முற்றும்போது மொத்த சர். அளவு குறைகிறது. 

இளநீர் பருகுவதால் உ உஷ்ணம் குறைவதோடு, குடலில் புழுக்கள் அவையும் கொல்லப்படுகின்றன. வயிற்று வாந்தி மற்றும் காலராவினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில்நீர் வற்றிய நிலையில் இளநீர் கொடுக்கலாம். நீர் சூடு, சிறுநீர் தடைபடுதல், நீர்க் கடுப்பு, நீரிழிவு, ஆஸ்துமா ஆகிய நோய்கள் குணமடையும். ரத்த ஓட்டத்தை இளநீர் அதிகரித்து, தாதுகளினால் ஏற்படும் விஷத் தன்மையை நீக்குகிறது. மஞ்சள்காமாலைக்கு இளநீர் ஒரு வரப்பிரசாதம்

கொப்புளம், சொறி, சிரங்கு, அம்மைக்கு..

தோலின் மீது ஏற்படும் கொப்புளம், சொறி, சிரங்கு மற்றும் அம்மை போன்ற நோய் இளநீர் பருகுவதால் குணம் அடைகிறது. இளநீரில் அலைனன், ஆர்ஜினைன், சிஸ்டைன், சிரைன் போன்ற அமினோ அமிலங்கள் பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாக இருப்பதால் குழந்தை களுக்கும் ஏற்றதே. மேலும் 100 கிராம் இளநீரில் 17 கலோரி சத்து உள்ளது.

 திசு வளர்ப்பு முறைப்படி ஆய்வுக்கூடத்தில் நோய்கள் தாக்காத உயர் விளைச்சல் ரகங்களை உருவாக்கும் முறையில் இளநீர் பயன்படுகிறது. இளநீருடன் சம அளவு சர்க்கரையும், சிறிதளவு பிரினுமேன் ஈஸ்ட்டும் சேர்த்து வினிகர் தயாரிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் இளநீரிலிருந்து வினிகர் வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுகிறது

எலுமிச்சை

மலாய்த் தீவினைத் தாயகமாகக் கொண்ட எலுமிச்சையில் சிட்ரிக் அமிலமும் வைட்டமின் 'சி' யும் நிறைந்து காணப்படுகிறது. எலுமிச்சைப் பழத்திலிருந்து ஊறுகாய், எலுமிச்சைப் பழச் சாறு, எலுமிச்சை நன்னீர், எலுமிச்சைப் பார்லிநீர், எலுமிச்சை முரப்பா, மார்மலோடு, எலுமிச்சை அவல், பழச்சேவை, தொக்கு போன்ற பல உணவுப் பண்டங்கள் தயாரிக்கலாம் கோடையில் வெளியில் அலைச்சல் உள்ளோருக்கு எலுமிச்சைப் பழச்சாறு அமுதமாக விளங்குகின்றது

பித்த மயக்கம், வாந்திக்கு

பித்த மயக்கம், வாந்தி மற்றும் நீர் வேட்கையை எலுமிச்சை போக்கும். நகச்சுற்றுக்கு ஏற்ற மருந்தாகும். ஜீரணமுண்டாக்கும். பசியை தூண்டும் தொற்று நோய்க் கிருமிகளை ஒழிக்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.

 தினமும் இரவு படுக்கும்போது எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, முகத்தில் நன்றாகத் தேய்த்துவிட்டு காலையில் கழுவினால் ஒரு மாதத்தில் முகத்தில் உள்ள பருக்களும் கருப்புப் புள்ளிகளும் மறைந்து விடும். மேலும் உடலில் தேய்த்துக் குளிக்க உடம்பில் பளபளப்புத் தோன்றும்.

 எலுமிச்சம் பழத்தினைத் தலையில் தேய்த்துக் குளிப்பதால் பல நோய்கள் குணமாகின்றன. இதுதான் “தேச்சி மூழ்கத் தெறிக்கும் வியாதியே" என தன்வந்திரி பகவான் தைல ஓலையில் கூறப்பட்டுள்ளது

பற்களுக்கு உதவும் எலுமிச்சை :

எலுமிச்சை யின் தோல் பற்களுக்கு உதவுக் கூடியது. எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காயவைக்க வேண்டும். பின்னர் இடித்துச் சூரணமாக்கி அத்துடன் உப்புத் தூளையும் சேர்த்துத் தினமும் காலையில் பல் தேய்த்து வந்தால், பற்களின் கறை நீங்கி வெள்ளை வெளேரென்று பிரகாசிக்கும் துர்நாற்றம் நீங்கும்.

 எலுமிச்சம் பழச் சாற்றுடன் தக்காளிச் சாற்றையும் சேர்த்துச் சுத்தமான தேனைக்கலந்து சாப்பிட கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் கோடைக்கால வயிற்று வலிக்குஎலுமிச்சம் பழத்தை ரசம் வைத்துச் சாப்பிட்டால் கோடைக் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தீரும் வயிற்றில் உள்ள வாயுவை அகற்ற, எலுமிச்சைச் சாற்றுடன் மோர் கலந்து பருகலாம். 

எலுமிச்சைப் பழச் சாற்றில் இஞ்சிச் சாற்றினைக் குழைத்துக் காலையிலும் மாலையிலும் தோன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஈளை இருமல் நின்று விடும். வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டால் மூட்டு வலிகள் பறந்து போகும். எலுமிச்சை பழ ரசத்துடன் உளுந்து மாவு சேர்த்து, கால்களில் பூசிவர சேற்றுப்புண் குணமாகும்.

வெள்ளரி

வெள்ளரியானது, இனிய சுவையும் மணமும்கொண்ட ஒரு கொடிவகைப் பயிராகும். வெள்ளரிய மேல் தோலில் முட்களுடன் காணப்படுவது முள் வெள்ளரி எனவும், மேல் தோல் முட்களின்றி மிருதுவாக நீண்டு இருப்பது நீள் வெள்ளரி எனவும் காய்கள் நீண்டு பருத்து பழுத்த பின் வெடிப்பது வெடிக்கும் வெள்ளரி எனவும் மூன்று வகைகள் உள்ளன. 

உடலுக்கு வெள்ளரிக் காய் குளிர்ச்சியை தந்து, வெயிலினால் ஏற்படும் உடல் அசதியைப் போக்குகின்றது. சருமத்தை வெள்ளரி குளிர வைக்கும். வெள்ளரிக்காயின் சாற்றை முகத்தில் தடவிவரக் கருத்துப் போன முகம் பளபளப்புடன் புதுப் பொலிவுடன் விளங்கும்.

 இதனை வட்டமான வில்லைகளாக வெட்டிக் கண்களைச் சுற்றியும், கண்களின் மீதும் வைக்கச் சோர்ந்த கண்கள் புத்துணர்ச்சி பெறும்வைட்டமின் 'பி', 'சி' நிறைந்தது:

கல்லீரல் கோளாறு காரணமாக ஏற்படும் மஞ்சள் நாமாலை, மலச்சிக்கலைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிக்காயைச் சாதாரணமாகச் சமைக்கப் பயன்படுத்தாமல் இளம் பிஞ்சுப் பருவத்தில் பறித்துப் பச்சைக் காய்களாகவோ, பச்சடி போன்ற உணவுப் பொருள்கள் தயாரிக்கவோ அல்லது பழுத்த பின் நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்தோ பல பழக்கலவை செய்யவும்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்

. ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் பேல் பூரி மற்றும் சுவையுள்ள உணவுப் பண்டங்கள் தயாரிக்கக் கொத்துமல்லி, கேரட், தக்காளி மற்றும் வெங்காயத்துடன் திவள்ளரியைச் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள்

 வெள்ளிரிக்காயில் வைட்டமின் 'பி', 'சி' சத்துகள் நிறைய உள்ளன. 100 கிராம் வெள்ளரியில் 96.3 சதவீத நீர்ச் சத்தும், 2.5 சதவீத கார்போஹைடிரேட் 2.4 சதவீத புரோட்டீன், 0.1 சதவீத கொழுப்பு, 7 மி திராம் வைட்டமின் 'சி', 10 மி. கிராம் கால்சியம், 1.5 தவீதம் இரும்புச் சத்து ஆகியவை உள்ளன

 வெள்ளரியில் நீர்ச் சத்து மிகுந்திருப்பதால் உடல் தட்டினைத் தணித்துச் சிறுநீரைப் பெருக்கி எரிச்சல் துவும் இன்றி எளிதாகச் சிறுநீர் வெளிவரவும் வகை செய்கிறது

ஆக, மருத்துவக் குணங்கள் நிரம்பிய இளநீர் எலுமிச்சை மற்றும் வெள்ளரி ஆகியவை தாகத்தைத் கணிக்கும் அமுதசுரபிகளாக விளங்குகின்றன. எனவே காடையில் விருந்தினர் களுக்கு காபி, டீ ஆகிய எனங்களைத் தருவதற்குப் பதிலாக இளநீர் லுமிச்சை பழச் சாறு மற்றும் வெள்ளரிக்காய் காடுத்துக் களைப்பைப் போக்கி நாமும் சாப்பிட்டு  நலத்தைக் காப்போம்





 

கருத்துரையிடுக

0 கருத்துகள்