துத்தி இலை எப்படி சாப்பிடுவது -thuthi keerai


 இது சாதாரணமாகத் தோட்டக் கால்களிலும், பாத்தி ஓரங்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு சிறு செடியின் இனத் தைச் சார்ந்ததாகும்

அகன்ற இலைகளுடைய செம்பருத்தி இனத்தைச் சார்ந்தது இந்த துத்திச் செடி, துத்தியின் இலைக் காம்புகள் நீளமாக இருக்கும் இலைக் காம்புகளின் இடுக்கில் பூப் பூக்கும்

பூக்கள் மஞ்சள் நிறமாகத் தோற்ற மளிக்கும். சில வகைத் துத்தியின் பூக்க வில் மெல்லிய மஞ்சள் நிறத்தோடு மையத்தில் கருஞ்சிவப்பாகவும் இருக் கும். பூப் பூத்து சிறிது நேரமான பிறகு இப்பூக்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதுண்டு. இதன் விதை தட்டை பாக இருக்கும், முந்திரிப் பருப்பை போன்று வடிவம் பெற்றிருக்கும். இவ்விதைகள் கரும்பழுப்பு நிற மானவை

துத்தி முழுயதும் வெப்ப, மிதவெப்ப பகுதிகளில் காணப்படுகிறது

இது இந்தியாவில் வடமேற் கினும், சிந்து காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும் நன்கு வளர்கிறது

துத்திச் செடிகள் சில சிறு செடி களாகவும், சில புதாகனாகவும், மற்றும் சில மரங்களாகவும் வளரும். ஏறக் குறைய நான்கு அடி உயரம் பேரை வளரக கூடியது. பொதுவாக இதைப் பயரிடுவ தில்லை . தானாகவே வளருகிறது. செடியை விதைகள் மூலம் எளிதில் விருத்தி செய்யலாம்

தீரும் நோய்கள்:

மூலநோய், வாய்ப்புண், வயிற்றுப் புண், வாய்வு, கட்டி, களுக்கு, வலி, கரப் பான், பல் ஈறு சம்பந்தமான நோய் பித்தம், பேதி, மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு, மேகச் சூடு, சக்கிய விருத்தி, வெள்ளை, வெட்டை கருமேகம், குட்ட ரோகம், உடற்குடு, நீர்ச்சுருக்கு, வாதம், சொறி சிரங்கு, தினவு, காமாலை, தொண் டைக் கம்மல், பல்ஈறு வலி,

இதன் இலை, பூ, வேர், விதை யாவும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை மூல நோயைக் கண்டிப்பதில் சிறப்புடையது

இலை :

மூலம், வாய்ப்புண், வயிற்றுப் புண் இந்நோய்களுக்கு துத்தி இலைக் கீரை யைச் சமைத்து புளி சேர்க்காமல் பகல்உணவில் சேர்த்து ஒருவேளை மட்டும் சாப்பிடவேண்டும்.

ஆசனக்கடுப்பு

துத்தி இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் சிறிதுவிட்டு வதக்கி மூல நோய் உள்ளவர்களுக்கு, ஆசனத்தில் வைத்துக் கட்ட இரண்டு அல்லது மூன்று வேளையில் கடுப்பு நிற்கும்உணவில் துத்திக்கீரைசேர்த்து ஒருவேளை மட்டும் சாப்பிடவேண்டும்.உணவில் சேர்த்து ஒருவேளை மட்டும் சாப்பிடவேண்டும்.

வாய்வு

பச்சரிசி அல்லது துவரம் பருப்போடு சேர்த்து சமைக்கப்பட்ட கீரையைச் சாதத் துடன் சேர்த்து சாப்பிட மூலாதாரத்தில் உள்ள வாய்வைக் கண்டிக்கும். மலத்தை இளக்கும்

மூலநோய் கட்டி

தேவையான துத்தி இலையை எடுத்து ஆமணக்கு நெய்யில் வதக்கிக் கட்டமூலநோயும், கிருமி விரணம் கட்டி விரண முலைகளும் நிவர்த்தியடையும் வெப்பத்தால் உண்டான பட்டிக்குக்கு கட்டி உடைத்து மும் முலையும் போல்

கடுமையான சுளுக்கு பிடித்த இடத் தில் துத்தி இலையை மேலிருந்து 4 நோக்கி மெதுவாகத் தேய்த்து ஒரு மணி நேரம் சென்ற பிறகு வெந்தி ஒத்தடம் கொடுக்கவேண்டும். இவ்வாறு கை தினங்கள் செய்துவர நாளடைவில் பரியை பான களுக்குதிக்கம் பெறும்

முறிந்த எலும்பு:

முதிந்த எலும்பை ஒன்று சோத்து சமைால் வேண்டும். பிறகு அதன்தே துணியை கத்தி கலயா மல் இருக்கும் பொருட்டு மூங்கில் பத்தை வைத்துக் கட்ட எதும்பி

இலையைக் கொதிக்கும் தால் போட்டு வேகவைத்து அந்த கம் மணியைத் தோய்த்துப் பிழிந்து ஒத்தடம் கொடுக்க வலி தீரும்

கரப்பான்

தேவையான இலையைக்கொண்டு வந்து காயவைத்துச் சிறு நீர்விட்டு அரைத்துக் குழந்தைகளுக்கு உண்டாகும் கபாலக் கரப்பானுக்கு போட குணமாகும்

பல், ஈறு நோய்க்கு :

இந்த இலையை மூன்று கைப்பிடி எடுத்து சுத்தம் பார்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி அக்கஷாயத்தை ஆறிய பிறகு எடுத்து வாய் கொப்பளிக்க பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் நீங்கும்

மூலம் குணமாக

துத்திக் கீரையை, தக்காளி பூண்டு வெங்காயம் கலந்து சமைத்துச் சாப்பிட மூலம் குணமாகும்

இந்த துத்தி இலையை எந்த வகையில் உண்டாலும் வெப்பத்தால் உண்டாகும் எல்லாப் பிணிகளும் நீங்கி சுகம் காணும்

மேகச்சூடு

தேவையான துத்தி இலையை எடுத்து சுத்தம் பார்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி கஷாயமிட்டு, வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து உட்கொண்டால்மேகச் சூடு முதலியன தணியும்

சொறி சிரங்கு அரிப்பு

இக்கீரையின் முழுச் செடியை எடுத்து வேளைக்கு 35 கிராம் எடுத்துத் தட்டி ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைப்படி தண்ணீர்விட்டு அரைக்கால் படியாக சுண் டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை சேர்த்து மூன்று வேளை கொடுத்துவர தினவு சொறி சிரங்கு, முதலியவை போகும்

மூலம் நீங்க

இதன் இலைகளை இடித்து கால் தம்ளர் சாறு எடுத்து காலை மாலை அருந்திவர ஒரே வாரத்தில் மூலம் குணமாகும்

பேதி:

தேவையான இலைச்சாறும், நெய்யும் சேர்த்து சாப்பிட பித்தத்தால் உண்டாகும் பேதி குணமாகும்

சிலந்திக் கட்டி

தேவையான இலைச் சாற்றுடன் பச் சரிசி மாக் கூட்டி களி கிண்டி விப்புருதி (சிலந்தி)க் கட்டிகளுக்கு வைத்துக் கட்ட கட்டி பழுத்து உடையும்

பித்த இருமல் இரத்த வாந்தி

தேவையான துத்திப் பூவை எடுத்து உலர்த்தி, உலர்த்தியதை எடுத்து இடித்து பாலும், கற்கண்டும் சேர்த்து அருந்திவர இரத்தவாந்தியும், பித்த காசமும் நீங்கும்.

குட்டம் கருமேகம் உட்சூடு:

தேவையான துத்தி விதையை எடுத்து சுத்தம் பார்த்து, பின், தூள் செய்து சாக கரையுடன் கலந்து மிளகு அளவு எடுத்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டுவர நாளடைவில் உட்குடும், கருமேகமும் குட்டமும் நீங்கும்

வெள்ளை வெட்டை

தேவையான துத்தி விதையை எடுத்து சுத்தம் பார்த்து கஷாயம் செய்து வடிகட்டி அருந்த நாளடைவில் வெள்ளை வெட்டை மூலம் நீங்கும்

தேவையான விதையை எடுத்துக்கள் நெருப்பில் போட்டு அதனின்று எழும் புகையை சிறு கிருமிகள் உள்ள குழந்தைகளின் ஆசனத்தில் வீசும்படி செய்ய கிருமிகள் அப்புகையினால் வெளிப் படும். மேலும், ஆசனத்தின் ஊறலும் அடங்கும்

வேர்:

வாதம், மேகச்சூடு

இந்த வேருடன், தேவையான அளவு திராட்சை பழமும் தண்ணீரும் சேர்த்துக் காய்ச்சி கண்ட வைத்து இறக்கி ஆறிய பின் காலை, மாலை இருவேளை அருந்திவர நீர்க் கருக்கு, வாதம், மேகச்சூடு நீங்கும்

பல் ஈறு இவ்வேரின் கஷாயத்தால் கொப்பளிக்க பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் நாளடைவில் நீங்கும்

உணவு

துத்தியின் இளம் கீரைகள் உண்ணும் உணவாகப் பயன்படுகின்றன. இக்கீரை புடன் பருப்பு சேர்த்துக் கடையலாகவும், பொரியலாகவும் செய்து மதிய உணவுடன் சேர்த்து உண்பது நம்நாட்டு வழக்கமா கும். இக்கீரையை பாசிப்பயறு அல்லது உடைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து பாகப் படி வேகவைத்துக் கடைந்து சாதத்துடன் சோத்து சாப்பிடலாம்

இக்கீரையை சமைக்கும்போது புளி சேர்க்காமல் சமைப்பது நல்லது. பொது வாக இக்கீரையை உணவோடு சேர்க்கும் போது மற்ற கீரைகளை உணவுடன் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இல்லை. ஆனால், இக்கீரையை உணவோடு சோக் கும்பொழுது பகல் உணவில் ஒருவேளை மட்டும் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது.

இக்கீரையும் இதன் கொழுந்தும், துவை யல் செய்யப்படுகிறது இவற்றைக் கொண்டு தோசை சுடலாம். பல்வேறு வகையான கறி வகைகள் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது. இதை உண்ப தால் சுக்கில விருத்தியும், உடல் குளிர்ச் சியும் உண்டாகும்

ஊட்டச்சத்து

இந்தக் கீரையில் தண்ணீர் 75 விழுக் காடு உள்ளது. 6.7 விழுக்காடு புரதச் சத் தும், ஒரு விழுக்காடு கொழுப்புச் சத்தும் 4.4 விழுக்காடு தாதுப்புக்களும், 7.9 விழுக்காடு மாவுப் பொருள்களும், இருக் கின்றன. இக்கீரை 87 கலோரி வெப்ப சக்தியைக் கொடுக்க வல்லது

100 கிராம் கீரையில் 550 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், 117 மில்லி கிராம் மணிச்சத்தும், 11.3 மில்லி கிராம் இரும் புச்சத்தும் உள்ளன

துத்திக் கீரையில் ஏறக்குறைய நூற் றுக்கு மேல் இனங்கள் உண்டு. துத்தியில் கருத்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி ஆகிய வற்றை பயன்படுத்த சில பிணிகள் நீங்கு கின்றன.

+ கருத்துத்திக் கீரையைப் பாகப் படுத்தி உணவில் சேர்த்து உண்ண, நீர் எரிச்சல், முளை மூலம், புண் கிருமிகள் போகும்

* சிறு துத்தியில், மலபந்தம், கரப் பான், சாதாரண நஞ்சுடைய பூச்சிகளின் கடி, நீர், எரிச்சல், முதலியவை நீங்கும்,

நிலத்துத்தி ஆரம்ப மூல ரோகத் தையும், கட்டிகளையும் போக்கும்

பொதுப் பண்பு

துத்தியில் பலவகை இருப்பினும் அவற் றின் குணத்தில் அதிக மாறுதல் ஏற்படு வதில்லை. இதன் இலை, வேர், பூ, விதை அணைத்துமே நோய் அகற்றும் மருந்தா கப் பயன்படுகின்றன. இது உள்ளழலாற்றி உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, தாது வெப்ப கற்றி ஆகிய செய்கைகளைச் செய்கிறது இது இனிப்புச் சுவையும் சீத வீரியமும், இனிப்புப் பிரிவும் கொண்டது

இவற்றுள் பலவற்றிலிருந்து கயிறு திரிக்கக்கூடியதான சற்று நல்ல பட்டுப் போன்ற நார் எடுக்கின்றனர்

இலையிலும், வேரிலும், தண்டிலும் ஒருவகைக் கோழைப் பொருள் மிகுந் திருக்கும். இதனைப் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். விதை யிலும் இக்கோழைப் பொருள் உண்டு

விதையை நீரில் ஊறவைப்பதின் மூலம் இக்கோழைப் பொருள் உரம் பெற்று உள் எழலாற்றியாகவும் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்