மஞ்சள் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மை-benefits of drinking turmeric water

 


மஞ்சள் தண்ணீர் குடித்தால்  ஏற்படும் நன்மை

அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் நமது உடலில் என்ன நடக்கும் என்பது பற்றித்தான் முக்கியமாக குளிர்காலம் ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் அவசியம் இதை செய்தால் அற்புதமான பலன்களை பெறமுடியும் மஞ்சள் மிக மிக அற்புதமான மருத்துவ தன்மை வாய்ந்தது என்பதற்கான காரணம் இதில் உள்ள குர்குமின் தான் எனவே இங்கே சொன்ன மாதிரி தினமும் நீங்கள் சாப்பிட்டு வந்தால் அதிலும் மழைக்காலத்தில் சாப்பிட்டு வந்தால் நமக்கு மழை காலத்தில் ஏற்படக்கூடிய தோற்று நோய்கள் மற்றும் பல நோய்களை எளிதாக முடியும் உண்மையில் அப்படி என்னதான் நன்மைகள் கிடைக்கும் இதில் ஏராளமான ஆன்டிஆக்சிடென்ட் ஆன்டி-ஏஜிங் பொருட்கள் உள்ளன முக்கியமாக மஞ்சளில் வாலடைல் எண்ணெய் என்ற திரவம் உள்ளது குர்குமின் என்ற நிறமிதான் இதற்கு காரணம் இது உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது பொதுவாக மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும் இதனால் சளி இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகள் மற்றும் தொண்டை பகுதிகளில் எரிச்சல் போன்றவை ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க மஞ்சள் தூள் கலந்த நீரை தினமும் குடித்து வந்தால் போதும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் அடுத்ததாக மழை மற்றும் குளிர்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருக்கும் எனவே தினமும் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம் அடுத்து எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் இதற்காக நாம் எதை எதையோ அடிக்கடி முயற்சி செய்து பார்த்திருப்போம் அந்த வகையில் மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றி முதுமையை தள்ளிப்போடும் எனவே காலையில் தினம் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூளை கலந்து குடித்து வந்தால் உங்களை இளமையாக வைத்திருக்கும் அதே போன்று குளிர் காலங்களில் தான் மூட்டு வலியின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆய்வு ஒன்றில் மஞ்சளில் உள்ள குர்குமின் ஆர்த்தரைடீஸ் நோயாளிகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் என்று தெரியவந்து உள்ளது குறிப்பாக மஞ்சள் தூளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர மூட்டுகளில் உள்ள வீக்கம் வலி போன்றவை வேகமாக குறைவது கண்டறியப்பட்டது அதே போன்று மஞ்சள் தூள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி மேலும் பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பித்து கல்லீரலை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளும் மேலும் பித்த ஓட்டத்தை தூண்டி பித்தப்பை வேகத்தை அதிகரித்து விபரங்களை குறைக்கும் எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த நீரை குடிப்பது நல்ல பலனைத் தரும் அதே போன்று இன்று மக்களிடையே அதிகம் காணப்படும் ஒரு பிரச்சனை இரத்த சோகை பிரச்சினை இதற்கு நம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு வகையில் மஞ்சளை சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை பிரச்சினை ஏற்படாமல் தடுக்கலாம் இரத்த சோகை பிரச்சினை இருந்தாலும் குணப்படுத்திவிடலாம் அந்த வகையில் தினமும் மஞ்சள் தூள் கலந்த வெந்நீரை குடிப்பது நல்லது அடுத்து மஞ்சளில் உள்ள குர்குமின் இதய ரத்த தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது 2011 ஆம் ஆண்டில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மஞ்சள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்களை தடுக்க உதவுவது கண்டறியப்பட்டது எனவே இதய நோய்கள் வருவதை தடுக்க தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வருவது மிகவும் நல்லது மேலும் மஞ்சளில் உள்ள குர்குமின் ஹார்மோன்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி மூளையில் எந்த வித பிரச்சனைகள் வராமல் தடுப்பது தெரிய வந்துள்ளது அதாவது மூளை ஆரோக்கியம் சார்ந்த கோளாறுகள் ஆன டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்றவற்றிற்கும் சிறந்த தீர்வாக இருப்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அடுத்ததாக மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி எதிர்த்துப் போராடி நோய் வராமல் தடுக்கிறது எனவே தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து சாப்பிடுவது நல்லது முக்கியமாக இதில் உள்ள குர்குமின் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிஆக்ஸிடன்ட் இன்ஃப்லம்மேஷன் போன்ற பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது இது இதயம் கல்லீரல் சிறுநீரகம் வயிறு குடல் என உடலின் அனைத்து பகுதிகளிலும் சரி செய்யக் கூடியது என்பதால் நீங்களும் செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக பார்க்க முடியும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்