பித்த நிவர்த்தி மருந்து/ petha nevarthi marunthu

 


பித்த நிவர்த்தி மருந்துகள்

சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு கூட கலந்துகுடித்து வரவும் 100 கிராம். திராட்சை உலர்ந்ததை 200 கிராம் கடுக் காயுடன் சேர்த்து அரைத்து தினசரி காலையில் 3 கிராம் அளவு  சாப்பிட்டு வர பித்தம், வாந்தி, வாய்கசப்பு தீரும்



3 சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்ச வேர், கிராம்பு ஆகிய வைகளை வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து அந்த தூளை தினம் 2 வேளை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினம் சாப்பிட்டு வர தலைச் சுற்றல் & பித்தம் குணமாகும்.

திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந் தூளை விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்த மற்றும் தலை சுற்றல் குணமாகும்
தலைவலி - ஜலதோஷம் (சளி] கபம் கரைய

செலவின்றி தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல் துளக்கியவுடன், வாயைச் சுத்தம் செய்யும் போது முதுகை நன்றாக வளைத்து, அவ்வாறு செய்யும் போது உணவு குழல் வழியாக உள்ளே இருக்கும் பித்தநீர் முதலில் வெளியேறும். இந்த பித்தநீர் வெளியேற்றம் பல நோய்கள் உருவாவதை தவிர்க்கும். மேலும் சளியும் சிறிது சிறிதாக வெளியே எனவே தினசரி (சளித்தொல்லை இருந்தாலும் இல்லையென்றாலும்) இது போலச் சுத்தம் செய்து சளியையும் பித்தநீரையும் வெளியேற்றினால் பல்வேறு நோய்களுக்கான மூல காரணங்களும், வெளியேற்றப்பட்டு மூச்சுவழி காற்றுப் பாதையும் சரியாகி விட்டால் இருதயம், வயிறு, சிறுநீர் உபாதைகள் வரை நீங்கி உடல் ஆரோக்கியம் இயற்கையாகவே சரி செய்யலாம் அ) நாட்டு வெங்காயம் 2 மூன்று மட்டும் பச்சையாகவே உரித்து சாப்பிட்டாலும்ஆரோக்கியம்,



ஆ கொண்டக் கடலையை லேசாக வறுத்து மென்று சாப்பிட்ட பின் பால் அருந்தி வர , தலைபாரம், இருமல் தீரும் 3. பனங்கிழங்கை அவித்து காயவைத்துப் பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும்

துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுபோட தலைவலி குணமாகும் துளசி இலைசாறு, வில்வ இலைசாறு வகைக்கு 100 மிலி எடுத்து, அத்துடன் 200 மிலி தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, சாறுசுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்குதேய்த்து வர சைனஸ் & தலைவலி தொல்லை தீரும்


பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் பயப்படாமல் உண்ணலாம் என்ற பழமொழிக்கு இணங்க ஒரு டம்ளர் பசும்பாலில் 10 மிளகை உடைத்துப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி இதனை இரவில் தூங்கப் போகிறதுக்குமுன்பே மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே இருமல், தலைவலி உடனே போய்விடும் 

 எளிமையான மருந்து மிளகை ஊசியால் குத்தி தீயில்சுட்டு அதனுடைய புகையை மூக்கு மூலியம் உள்ளுக்குஇழுத்தாலே ஜலதோஷம், தலைவலி போய்விடும் நொச்சி இலையை தலையணைக்குள்ளே பரப்பி வச்சி தூங்கினாலே நிம்மதியான தூக்கம் வருவதுடன் தலைபாரம் இறங்கி, சளிப் பிரச்சினையும் விலகி விடும்.


மாசிக்காயை பொன் வறுவலாக வறுத்து,  தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை  தேன் கலந்து சாப்பிட துளி அகலும் தும்டை பூவுடன் மிளகு  தூளாக்கி காலை, மாலை2நாட்கள் சாப்பிட சளி அகலும் சூடான சுக்கு, மல்லி காப்பியில் சிறிது தேன் கலந்து குடிக்கசளி கரையும்


 சித்தரத்தை, சுக்கு, மிளகு, சதகுப்பை, திப்பிலி இவைகளை சம அளவு எடை எடுத்து நன்கு பொடித்து கால் லிட்டர் நீரில் போட்டு அது பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி மூன்று பங்காக்கி, ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் மேற்கூறிய நோய்கள் நீங்கும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்