Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வைணவ திருத்தலங்கள்/ divya desam divya shakti

1.ஸ்ரீரங்கம் (திருவரங்கம்)



மூர்த்தி / தாயார்/        ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி


(ஆதிசேஷன் மீது புஜங்கசயன திருக்கோலம்)

ஸ்தல மஹிமை

வைணவ ஸ்தலங்களிலேயே சிறந்த தென்பதால் பெரிய கோவில் மற்றும் "பூலோக வைகுந்தம்" என்றும் போற்றப்படும் திருமளங்கம் | பன்னிரெண்டு ஆழ்வார்களில், அரங்களை மணந்த ஆண்டான் நாச்சியார் உட்பட பதினொன்று வைணவ சிரேஷ்டர்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ள திவ்ய ஸ்தலம். இங்குள்ள திவ்ய ரெங்கநாதர் (நம்பெருமாள்) விக்ரகம் இராமபிரானால் விபீஷணருக்கு அளிக்கப்பட்டதாக வரலாறு.

முக்கிய உற்சவங்கள்

வருடத்திற்கு மொத்தம் 322 விழாக்கள் நடக்கும் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி மகோத்ஸவம் முதன்மையானது. மார்கழி-தை (டிசம்பர்-ஜனவரி) மாதங்களில் பகல் பத்து, ராப்பத்து என்று 20 நாட்கள் நடைபெறும் உத்ஸவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் அனைத்தும் பாடப்படும்.

இடம் / மார்க்கம்

திருச்சிராப்பள்ளி ஜங்ஷனிலிருந்து 5 கிலோ மீட்டர் மதுரைசென்னை ரயில் பாதையிலும், NH7 தேசிய நெடுஞ்சாலையிலும்காவிரிக்கரையில் அமைந்துள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------------------

2. திரு உறையூர்



மூர்த்தி / தாயார்/ஸ்ரீவாஸ லக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ அழகிய மணவான ஸ்வாமி

ஸ்தல மஹிமை

திருப்பாணாழ்வாரின் அவதாரஸ்தலம், திருமங்கை ஆழ்வார். இதனை "திருக்கோழி" என்று குறிப்பிடுகிறார். அழகிய மணவாளர், உறையூர் வள்ளியைத்திருமணம் செய்து கொண்ட ஸ்தலம் இது.

முக்கிய உற்சவங்கள் 

 கல்யாண உற்சவம் திருவரங்க உற்சவருக்கு பங்குன உத்ளபவத்திற்கு முதல் நாள் இங்கு நடைபெறுகின்றது.

இடம் / மார்க்கம்

திருச்சிராப்பள்ளி அருகில் உள்ளது. நல்ல ரோடு இணைப்புகள் கொண்ட ஸ்தலம்


-----------------------------------------------------------------------------------------------------------------------------

3. திரு தஞ்சை மாமணிக் கோயில்

  


மூர்த்தி / தாயார் 

ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ நில பேமசுப்பெருமா


ஸ்தல் மஹிமை 

மூன்று சன்னதிகள் ஸ்ரீ நீல மேகப்பெருமாள் - ஸ்ரீ செங்கமல வல்லி, ஸ்ரீ மணி குன்றப் பெருமாள் - ஸ்ரீ அம்புஜ வல்லி தாயார், ஸ்ரீ நாசிம்பமர் - ஸ்ரீ தஞ்சை நாயகி, அருகருகே அமைந்துள்ள ஸ்தலம்.


இடம்/மார்க்கம்

தஞ்சாவூருக்கு வடக்கே ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலவெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது.


4. திரு அன்பில்


ஸ்ரீ அழகிய வல்லீ ஸமேத ஸ்ரீ வடிவழகிய நம்பி ஸ்வாமி

ஸ்தல் மஹிமை

திருமழிசை ஆழ்வரால் மங்களாசாஸனம் திவ்ய தேசம்.

இடம்/மார்க்கம்

லால்குடிக்கு அருகில் உள்ளது. திருச்சியிலிருந்து நேரடிபஸ் வசதி இருக்கிறது.


5. திருக்கரம்பனூர்- உத்தமர் கோயில்

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ பூர்வாதேவீ ஸமேத ஸ்ரீ புருஷோத்தம ஸ்வாமி

ஸ்தல் மஹிமை

பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷ நிவாரணம் பெற சிவபெருமான் இங்கு வந்து தோஷம் நீங்கப் பெற்றதாக வரலாறு சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு இங்கு சன்னதிகள் உண்டு. சிவபெருமான் இங்கு பிக்ஷாடன மூர்த்தியாக இருப்பதால் இத்தலம் பிக்ஷாண்டாம் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது.

இடம்/மார்க்கம்

ஸ்ரீரங்கத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி - முசிரி நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து பஸ் மூலம் செல்லலாம்.


 6. திரு வெள்ளாறை ( வேதகிரி)

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ பங்கய செல்வி ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ ஸ்வாமி

ஸ்தல் மஹிமை

இப்புராதன கோவிலுக்கு இரண்டு வாசல்கள் உண்டு. பகவாலை தரிசிக்க தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் செல்ல வேண்டும். பெரியாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்தருளிய ஸ்தலம் இது.

இடம்/மார்க்கம்

ஸ்ரீ ரங்கத்திற்கு 15 கிலோ மீட்டர் வடக்கில் உள்ளது.திருச்சியிலிருந்து இங்கு சென்று வர பஸ் வசதி உள்ளது.


7. திருப்புள்ளம் பூதங்குடி

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ பொற்றாமரையாள் ஸமேதஸ்ரீ வல்வில்லி ராம ஸ்வாமி

ஸ்தல் மஹிமை

ஸ்ரீராமர் ஜடாயுவை தகனம் செய்த பிறகு இங்குள்ள பொன்னை மரத்தடியில் படுத்து இளைப்பாறியதாக புராணம் கூறுகிறது. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சுவாமிமலைக்கு மேற்கில் 5 நல்ல பஸ் வசதி இருக்கிறது.

இடம்/மார்க்கம்

கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருக்குடந்தையிலிருந்து


8.திருபேர் நகர்-கோயிலடி


ஸ்ரீ இந்திரா தேவி ஸமேத

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ அப்பக்குடத்தான் ஸ்வாமி

ஸ்தல் மஹிமை

நம்மாழ்வார் மோக்ஷம் அடைந்த திருஸ்தலம் உபமன்யு முனிவருக்கு பகவான் ஆசி வழங்கி இடம்.

இடம்/மார்க்கம்

கொள்ளிடக் கரையில் திருச்சியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து நல்ல பஸ்வசதி உண்டு.


9.திரு ஆதனூர்

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத

ஸ்தல் மஹிமை

ஸ்ரீ ஆண்டளக்குமய்யன் ஸ்வாமிமரக்காலை தலையணையாகவும், கையில் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு சயனித்திருப்பதால், இறைவனின் இத்திருக்கோலம் ஸ்ரிஷ்டி கர்த்தாவின் ஸ்வரூபமாக அமைந்துள்ளது.

இடம்/மார்க்கம்

இந்த திவ்ய தேசம், சுவாமி மலை அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து இங்கு போய்வர, பஸ் வசதி இருக்கிறது.


10. திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

மூர்த்தி / தாயார்

\ஸ்ரீ செங்கமலவல்லி ஸமேதஸ்ரீ ஆமருவியப்பன் ஸ்வாமி

ஸ்தல மஹிமை

கம்பரின் அவதார ஸ்தலம் இது. திருமங்கை ஆழ்வாரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாஸனம் செய்துள்ள ஸ்தலம்.

இடம் / மார்க்கம்

கும்பகோணத்திலிருந்து மாயூரம் செல்லும் மார்க்கத்திலுள்ளஸ்தலம்.


11. திரு சிறுபுலியூர்

மூர்த்தி / தாயார்

: ஸ்ரீ திருமாமகள் ஸமேத ஸ்ரீ அருமாகடல் ஸ்வாமி

ஸ்தல மஹிமை

புலிக்கால்களைக் கொண்ட வியாக்ரபாதர் இங்குள்ள பெருமாளை சேவித்து வைகுண்டம் சென்றதால் இந்த ஸ்தலம் புலியூர் என்று அழைக்கப்படுவதாக ஸ்தலபுராணம் கூறுகிறது.

இடம் / மார்க்கம்

மாயவரம் - -அறந்தாங்கி ரயில் பாதையில் கொல்லுமாங்கடி ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. பஸ் வசதி உண்டு.


12. திருச்சேறை

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ ஸாரநாயகீ ஸமேத ஸ்ரீ ஸாரநாத ஸ்வாமி

ஸ்தல மஹிமை

ப்ரளய காலத்தில் இந்த க்ஷேத்திரத்திலுள்ள மண்ணைக் கொண்டு ஒரு கடம் செய்து அதில் வேதங்கள் வைத்துக் காப்பாற்றப் பட்டதாக ஸ்தலபுராணம் கூறுகிறது. இந்த ஸ்தலம் "பஞ்ச ஸார க்ஷேத்திரம்" என்றும் அழைக்கப்படுகிறதுதைப்பூசத்தேர் விசேஷமான திருவிழாவாகும். தைப்பூசத்தன்று பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, ஸாரநாயகி ஆகி 5 நாச்சியார்களோடு சேவை சாதிப்பார்.

இடம் / மார்க்கம்

கும்பகோணத்திற்கு 10 கி.மீ. தென் கிழக்கில் இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. திருக்குடந்தையிலிருந்து பஸ் வசதி உள்ளது.


13.திருதலைச்சங்க நாண்மதியம்

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ தலைச்சயகநாயகீ ஸமேத ஸ்ரீ நாண்மதிய ஸ்வாமி

ஸ்தல மஹிமை

திருமங்கை ஆழ்வார் மங்களா சாஸனம் செய்துள்ள விசேஷ பெற்ற ஸ்தலம்.

இடம் / மார்க்கம்

மாயவரத்திற்கு 5 கி.மீ. தொலைவில் உள்ளது. பஸ் வசதி




14.திருக்குடந்தை

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ கோமலவல்லீ ஸமேத ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி

ஸ்தல மஹிமை

ஆதி சேஷ சயனத்தில் சேவை சாதிக்கும் மூலவர் சாரங்கபாணி என்றும் ஆராவமுதன் என்றும் துதிக்கப் பெறுகிறார். திருமழிசை ஆழ்வாருக்காக கிடந்தவாறு எழுந்திருக்க முயலும் கோலம். சிரிஷ்டிக்கு வேண்டிய மூல பொருட்கள் கொண்ட அமிர்த கும்பம் இங்குள்ளதால் கும்பகோணம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஸ்தலத்திலுள்ள ராமஸ்வாமி திருக்கோவிலில் சித்திர ராமாயணம் வரையம் பெற்றுள்ளது. ஆழ்வார் எழுவர் மங்களா சாஸனம் செய்துள்ள திவ்ய தேசம்.

இடம் / மார்க்கம்

ரயில், பஸ் வசதிகள் கொண்ட திருத்தலம் திருக்குடந்தை.



:15. திருகண்டியூர்

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ கமலவல்லீ ஸமேதஸ்ரீ ஹரசாபஹர ஸ்வாமி

ஸ்தல மஹிமை

திருக்கரம்பனூர் போன்று சிவன் பாப விமோசனம் பெற்ற திவ்ய க்ஷேத்திரம். சிவபெருமான் சாபத்தைக் கண்டனம் செய்தது போல சேவை சாதித்த ஸ்தலமாதலால் இவ்வூர் கண்டியூர் என்று அழைக்கப்படுகிறது.

இடம் / மார்க்கம்

தஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து பஸ் வசதி உண்டு.


16.திரு விண்ணகர் (ஒப்பிலியப்பன் சந்நிதி)

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஸ்ரீ ஒப்பிலியப்பன் ஸ்வாமி

ஸ்தல மஹிமை

மூலவர் ஒப்பிலி அப்பன் (ஒப்பற்றவன்) திருவேங்கட முடையானுக்கு த னார் என்பது ஐதீகம் திருப்பதி போக இயலாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிர தைனைகளை நிறைவேற்றுகின்றனர். மருகண்டு மஹரிஷியின் பத்தினியின் விருப்பப்படி ஒப்பிலியப்பன் உப்பில்லாத பிரசாதங்களையே ஏற்றுக் கொள்வதால் உப்பிலியப்பன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இடம் / மார்க்கம்

திருக்குடந்தையிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள திவ்ய தேசம் கும்பகோணத்திலிருந்து - திருநாகேஸ்வரம் வழி. பஸ் வசதி ஏராளமாக உள்ளது.


17.திருக்கண்ணபுரம்

மூர்த்தி / தாயார்

: ஸ்ரீ கண்ணபுர நாயகீ ஸமேத ஸ்ரீ சௌரி ராஜ ஸ்வாமி

ஸ்தல மஹிமை

மூலவர் நீலமேகப் பெருமாள். இது பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வார் திருமந்திர உபதேசம் பெற்ற ஸ்தலம். அடியாரின் வாக்கை மெய்ப்பிக்க தன் திருமுடியில் திருக்குழற் கற்றையை வளர்த்துக் காட்டியதால் எம்பெருமான் சௌரிராஜன் என்று அழைக்கப்படுகிறார். விவிஷண ஆழ்வாருக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருளிய ஸ்தலம் இது.

இடம் / மார்க்கம்

நாகப்பட்டிணம் அருகிலுள்ள நன்னிலத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. பஸ் வசதி பெற்ற ஸ்தலம்.


18.திருவாலி (திருநகரி)

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ அம்ருத கடவல்லீ ஸமேத ஸ்ரீ வயலாலி மணவாள ஸ்வாமி

ஸ்தல மஹிமை

திருவாலியும் திருநகரியும் ஒன்றுக்கொன்று அருகில் இருக்கும் ஸ்தலங்களாகும். பகவானை திருமகள் ஆலிங்கனம் செய்து கொண்ட ஸ்தலமாதலால் "திருவாலி" என்று அழைக்கப்படுகிறது. திருவாலி மூலவர் வக்ஷ்மி நரசிம்மர். திருநகரி மூலவர் வேதராஜன். திருமங்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலம் இது.

இடம் / மார்க்கம்

சீர்காழிக்கு தென்கிழக்கில் 8 கி.மி. தூரத்தில் இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. நல்ல பஸ் போக்குவரத்து வசதி பெற்றது.


19.திருநாகை (நாகப்பட்டினம்)

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ ஸௌந்தர்யவல்லி ஸமேதஸ்ரீ ஸௌந்தர்ய ராஜ ஸ்வாமி

ஸ்தல மஹிமை

நீலமேகப் பெருமாளின் திவ்ய ஸ்தலம். நாகராஜனுக்கு பிரத்யக்ஷம் ஆன படியாதலால் "நாகை" என்று அழைக்கப்படுகிறது. வீற்றிருக்கும் கோலத்தில் கோவிந்த ராஜரும், சயனகோலத்தில் ரங்கநாதரும் இரு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்: திருமங்கை ஆழ்வார் மங்களா சாஸனம் செய்தருளிய ஸ்தலம் இது.

இடம் / மார்க்கம்

தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுடனும் பஸ் போக்குவரத்து வசதிபெற்றுள்ள ஸ்தலம் நாகை.


20. திருநறையூர் (நாச்சியார் கோவில்)

மூர்த்தி / தாயார்

ஸ்ரீ வஞ்ஜு(ள)வல்லி ஸமேத ஸ்ரீ நம்பி ஸ்வாமி

ஸ்தல மஹிமை

இங்கு நாச்சியாருக்கே பிரதானம் அளிக்கப்படுவதால் இத்தலம் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. உற்சவத்தின் போது நாச்சியாரே முதலில் வீதிக்கு எழுந்தருளுவார். பக்ஷிராஜன் கருடனுக்கு தனிச்சிறப்பு பெற்ற ஸ்தலம்.ஆடி சுக்ள பஞ்சமி திதியில் நடக்கும் கருட உத்ஸவம் இத்தலத்தின் தனிச்சிறப்பு.


கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில்பஸ் வசதி பெற்றது.


21. திருநந்திபுர விண்ணகர்- நாதன் கோயில்


ஸ்ரீ செண்பக வல்லி ஸமேத ஸ்ரீ ஜகந்நாத ஸ்வாமி

ஸ்தல மஹிமை

இத்தலத்திற்கு தக்ஷினா ஜகந்நாதம் என்ற சிறப்பு பெயர் உண்டு. நந்தி இந்த க்ஷேத்திரத்தில் தவம் செய்து சாபவிமோசனம் பெற்றதாக வரலாறு.


கும்பகோணத்திற்கு தெற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருக்குடந்தையிலிருந்து நிறைய பஸ் வசதிகள் உள்ளன.


22. திரு இந்தளூர்


ஸ்ரீ புண்டரீகவல்லி ஸ்மேத ஸ்ரீ பரிமள ரங்கநாத ஸ்வாமி

ஸ்தல மஹிமை


சந்திரன் சாப விமோசனம் பெற்ற க்ஷேத்திரம் இது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ள இந்தக் கோவிலில் ஐப்பசி முழுக்க உற்சவம் நடைபெறுகிறது.


மாயவரம் டவுன் - ரயில், பஸ் வசதிகள் பெற்ற ஸ்தலம்


23. திருச்சித்திர கூடம்-(சிதம்பரம்)


ஸ்ரீ புணடரீகவல்லீ ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி

ஸ்தல மஹிமை

இங்குள்ள மூலவர் கோவிந்தராஜப்பெருமாள் போசு சயனமாக கிழக்கு நோக்கியபடி நடராஜப் பெருமானின் தாண்டவத்தை ரசித்தபடி சேவை சாதிக்கிறார். இங்கிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள காட்டுமன்னார் கோவில், நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை தொகுத்த நாத மாமுனிகள் அவதரித்த ஸ்தலமாகும்.


இடம் / மார்க்கம் : ரயில், பஸ் தடங்களில் அமைந்துள்ள இந்த ஸ்தலம் சென்றடையஎல்லா ஊர்களிலிருந்தும் வசதிகள் உண்டு.


:




:











கருத்துரையிடுக

0 கருத்துகள்