அவரைக்காய் என்றதுமே அவரைக்காயை இன்று நிறைய பேர் முகம் சுளிக்கும் நிலையில் பலர்
நான்வெஜ் சாப்பிடுவதில் காட்டும் ஆர்வம் சைவ உணவுகள் சாப்பிடுவதில் காட்டுவதில்லை என்பது தான் உண்மை காய்களில் அவரைக்காயில் கொழுப்பு சத்து குறைவாகவும் புரத சத்து அதிகமாக உள்ள அரிய மருத்துவ நன்மைகள் கொண்ட காயாகும்
அதுமட்டுமல்ல இதில் நார்ச்சத்து விட்டமின் ஏ விட்டமின் ஏ விட்டமின் சி ரிபோ பிளேவின் நியாசின் சுண்ணாம்புச்சத்து இரும்புச்சத்து மக்னீசியம் பொட்டாசியம் துத்தநாகம் செலினியம் சோடியம் கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3 ஒமேகா 6 இப்படி பெரிய சத்துக்கள் பட்டாளமே உள்ளது
இன்னும் சொல்லப் போனால் மனித உடலுக்கு தேவையான சத்துகளும் விட்டமின்களும் இதில் அதிகம் இருப்பதால் அதிகப்படியான பலன்களைக் கொடுக்கிறது இந்த அவரைக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் உங்களுக்கு தெரிந்தால் இவ்வளவு நாள் இதை தெரிஞ்சுக்காம விட்டுவிட்டோமே என்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்
பொதுவாக நம் உணவில் தினமும் காய்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் அந்த வகையில் அவரை காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலில் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாது
உண்மையில் இன்று நிறைய பேர் சுவாசப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் இவர்கள் கண்டிப்பாக வாரம் இரண்டு முறையாவது அவரைக்காயை உணவில் சேர்த்து வருவது நல்லது மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது கபம் வாதம் பித்தம் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும்
அடுத்து நம் நுரையீரலில் இருந்து மற்ற செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கு இரும்பு சத்து மிகுந்த ஹீமோகுளோபின் உதவுகிறது அந்த வகையில் அவரையில் இரும்புசத்து அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது அதேபோன்று இதன் பிஞ்சில் துவர்ப்புச் சுவை அதிகமுள்ள இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது உண்மையில் இரத்தம் சுத்தமாக இருந்தாலே தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்கலாம்
முக்கியமாக இந்த அவரைக்காய் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் என்பதால் இரத்த அழுத்தம் இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது
அடுத்து சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம் தலைச்சுற்றல் கை கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும் கால்களில் 9 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன இதனால் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது முக்கியமாக மலச்சிக்கலைப் போக்கும் மூல நோய் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது
அவரைக்காய் உணவை விரைவில் செரிக்க செய்யும் ஆற்றல் கொண்டது பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும் அதிலும் நான்வெஜ் உணவுகள் வறுக்கப்பட்ட உணவுகளில் நார் சத்துக்கள் இல்லாததால் அவற்றை சாப்பிடும் பொழுது உப்பு கலந்த உணவுகளை ஜீரணிக்க அதிக சிரமப்படுகிறது அந்த வகையில் நார்ச்சத்து அதிகமுள்ள அவரைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளில் நலத்தை மேம்படுத்தும் எனவே அடிக்கடி உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாது
அதேபோன்று அவரைப் பிஞ்சை வாரம் இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும் மேலும் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும் அதிலும் வாத சம்பந்தமான நோய்களுக்கும் கண்களில் கோளாறு உள்ளவர்களுக்கும் பிஞ்சு அவரைக்காய் உணவுகளை கொடுத்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்
முக்கியமாக நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்தும் அவரைக்காயில் கணிசமான அளவில் உள்ளது அதே போன்று கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை தருவதில் அவரைக்காயில் உள்ள ஃபோலேட் என்ற சத்து உதவுகிறது இதனால் கருவுற்ற பெண்கள் அவரைப் பிஞ்சை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் குறைப்பிரசவம் குழந்தையின் மூளை வளர்ச்சி ஏற்படும்
முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை வராமல் தடுத்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகிறது அடுத்து அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது மேலும் இதில் உள்ள புரதச்சத்தும் சேர்வதால் இந்த உணவைச் சாப்பிடும் பொழுது நம் வயிறு நிறைந்த உணர்வு நமக்கு கிடைக்கும் கால்களில் 10 கிராம் புரதச்சத்து உள்ளது இதனால் சிறிது சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது அதே சமயத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைத்து விடுகிறது எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்
அடுத்து புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்ளும் விட்டமின் சி அவரைக்காயில் நிறைய உள்ளது மேலும் இதில் மிகுதியாக உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது அதேபோன்று அவரைப் பிஞ்சுகளை நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம் பூண்டு மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்
நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும் விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் மன அமைதியும் கொடுக்கிறது பொதுவாக முற்றிய அவரைக்காயை விட பிஞ்சு அவரையே நல்லது
மேலும் மூட்டுவலிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது முக்கியமாக மூளையை வலுவாக்கி அறிவுக்கூர்மையை அதிகரிக்க உதவும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் அவரைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கத்தைப் பெறலாம்
முக்கியமாக உடலுக்கும் மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது முதுமையில் வரும் நோய்களைத் தடுக்கக் கூடியது தசை நார்களை வலுப்படுத்தும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கூடியது
எனவே இனி நீங்களும் அவரைக்காயை உணவில் வாரம் இரண்டு முறையாவது சேர்த்துக்கொள்ளுங்கள் உண்மையில் இன்றைய மாறிவரும் நவீன உணவு முறை நாவிற்கு மட்டுமே ருசியை தவிர உடலுக்கு ஒரு நன்மையும் கிடையாது எனவே இதுபோன்ற ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கை உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
0 கருத்துகள்