சுண்டைக்காய் பொதுவாக பித்த பிணியை போக்கும் வாதம் கப நோய்களைக் கண்டிக்கும் கோழையை அகற்றுவதில் தூதுவளைக்கு சமமானது மேலும் உடலில் உள்ள கிருமிகளை கொல்லும்.
புழு பூச்சிகளைப் போக்கும் குறிப்புகள் மலக்கிருமிகள் வெளியே தள்ளும் அருசி அசீரணம் பேதி மார்ச்சளி இருமல் முதலியவற்றை போக்கும் சிறப்புடையது .
இதில் பால் சுண்டை பத்தி பார்ப்போம் இது சுத்த சைவ உணவு உண்பவர்கள் அடிக்கடி பச்சையாகவே சுண்டைக்காய் சாம்பார் பச்சடி முதலியவைகளை செய்து சாப்பிடுவார்கள் அல்லது ஆமணக்கு எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொண்டு வெங்காயம் கருவேப்பிலை கொத்துமல்லி இஞ்சி மிளகாய் கிள்ளிப் போட்டு சாம்பார் போலவும் சாப்பிட ருசியாக இருக்கும் அத்துடன் பசியைத் தூண்டும் .
மார்பில் கபக்கட்டு உபத்திரவம் மலக்கிருமி உடையவர்கள் மார்பில் கபக்கட்டு உபத்திரம் உடையவர்கள் இருமல் நோயாளிகள் வாதத்தால் துன்பங்கள் மூலச்சூடு மூலக்கடுப்பு திமிர்ப்பூச்சி அரிப்பு ஏற்பட்டு தொல்லைகளும் இந்த turkey berry சுண்டைக்காய் வாரம் இரண்டு முதல் நான்கு தடவை உணவில் உண்டு வர மருந்துகளுக்கு பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை
சுண்டைக்காய் வற்றல் சுண்டை வற்றல் மிகுந்த கார்ப்பு ருசி இருக்கும் கிருமிகளுக்கு எதிரி உடலில் எந்தவிதமான கிருமிகளும் இருந்த போதிலும் ஒழித்துக்கட்டும் நாக்குப்பூச்சி கொக்கிப் புழு நாடாப் புழு சிறிய திமிர் பூச்சிகள் ஆகியவற்றை எல்லாம் போக்கும் சுண்டக்காய் .
மலைச்சுண்டை சுத்தம் செய்வது அவசியமாகும் தேவையானவற்றை வாங்கி புளித்த மோரும் அளவுடன் உப்பு கூட்டி அதில் ஊற வைத்த பின்பு உலர்த்தி எடுக்க வேண்டும் இப்படி இரண்டு மூன்று முறை ஊறவைத்து எடுத்து உலர்த்தி எடுக்க வேண்டும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு சாப்பாட்டில் நெய் அல்லது நல்லெண்ணெயில் வறுத்து வைத்துக் கொண்டு சாப்பிடலாம் .
ஆஸ்துமா காசநோய் வேதனைப்படும் எல்லோரும் பயன்படுத்தலாம் சுண்டை வற்றல் சூரணம் சுண்டை வற்றல் நெல்லி வற்றல் மாதுளை ஓடு மாங்கொட்டை பருப்பு கறிவேப்பிலை சீரகம் இந்த ஒன்பது பொருளையும் எடுத்து சிறிதளவு நெய் அல்லது ஆமணக்கு நெய்யை மண்சட்டியில் விட்டு பொன் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து சூரணம் செய்து வைத்துக் கொள்ளவும் இதை தினம் காலை மாலை இரண்டு வேளை ஒரு சிட்டிகையளவு வாயில் போட்டு மோர் குடித்து வர நோய்கள் தீர்ந்து உபத்திரவம் தணியும் என்பதில் ஐயமில்லை
சோற்றுடன் கலந்து உண்ணும் பொடி சுண்டை வற்றல் கறிவேப்பிலை மிளகு சீரகம் வெந்தயம் ஆக ஐந்து நல்லெண்ணெயில் இளம் வறுப்பாக வறுத்து எடுத்து உப்பு சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு பகல் இரவு உணவுகளில் முதல் ஒரு கை பிடி சோற்றுடன் ஒரு ஸ்பூன் பொடியை சூடான பிசைந்து சாப்பிட பசி மந்தம் மூல வியாதிகள் ஆகியவை நீங்கி நன்றாக பசி எடுத்து உணவை செரிமானம் ஆகும்
0 கருத்துகள்