பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்/Home remedies told by grandma

 

                             

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்/Home remedies told by grandma

                             பாட்டி  வைத்தியம்


நெஞ்சு சளி

 தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைக்கவும். பின் ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

 தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர்

 விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்

கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்ப குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து, வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

 குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்,

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக்கி வெந்நீரில் போட்டு உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுட் புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

 மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு மலச்சிக்கல் தீரும்.

Home remedies told by grandma


வயது 100 ஆனாலும் இந்த 10 நோய்கள் வராது


இடுப்பு வலி,மூட்டு வலி. வாயு. தைராய்டு. சர்க்கரை.உடல் சோர்வு. பாத எரிச்சல்.கல்லீரல்.கைகால் வலி.வயிற்று கோளாறு.... இதற்கு கசாயம்;-

சீரகம்... கொத்துமல்லி விதை... சோம்பு... மிளகு...பட்டை.. கிராம்பு... தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து இரவே 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து...மூடி வைத்து... காலையில் வெறும் வயிற்றில் 5 நாளைக்கு குடித்து வந்தால் மேலே சொன்ன 10 நோய்களும் ஆயுளுக்கும் அரவே வராது...


கருத்துகள்